நாம் சில சந்தர்பங்களில் சில புகைப்படங்களை பார்த்து உண்மை என்றே நினைத்து ஏமாந்து போன சந்தர்பங்கள் நிறையவே நடந்து இருக்கும். இந்த கால கட்டத்தில் இந்த வகை ஏமாற்று வேலைகள் மிக அதிகமாகவே நடைபெற்றுகொண்டு இருக்கின்றன.
இவ்வாரனா ஏமாற்று வேலைகளை அதாவது போடோஷோப் வைத்து மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை Adobe நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த வசதியினை Adobe நிறுவனம் போடோஷோப் யில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக Adobe நிறுவனம் Artificial Intelligence தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம் மேலும் குறிப்பிடும் போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான புகைப்படங்களை தடுக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment