அமெரிக்கவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி குழு ஒன்று மிக சிறிய கணனி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த உலகிலேயே மிக சிறிய கணனியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த கணனியானது வெறும் 0.3 மில்லிமீட்டர் அளவினையே கொண்டது. இதற்கு அவர்கள் மிச்சிகன் மைக்ரோ மோட் என பெயரிட்டுள்ளனர். இந்த கணனியில் தகவல் பரிமாற்றத்தை காட்ட மிக சிறிய LED மின்குமிழ் பொருத்தப்பட்டுள்ளது. இது தகவல் பரிமாற்றத்தின் போது ஒளிரும்.
இந்த கணனி அளவில் சிறிதாக இருந்தாலும் செய்யும் வேலை பாரதூரமானது. இந்த கணணி மூலம் புற்றுநோயை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் முடியும். இருப்பினும் இது அளவில் சிறிதாக இருப்பதால் இதில் மின் துண்டிக்கப்பட்டால் சேகரித்த தகவல்கள் அழிந்துவிடகூடியது.
இக்கணனிகள் பல்வேறு ஆராய்ச்சி செயத்திட்டங்களுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சின்ன சின்ன குறைபாடுகள் இருந்தாலும் அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் மேம்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment