பல்வேறு சர்ச்சைகளில் மாட்டி வரும் Facebook நிறுவனம் தங்களது பங்கு சந்தையில் சரிவினை சந்தித்துள்ளது. இதனது பெறுமதி சுமார் 150 பில்லியன் டொலர் இருக்கும் என கூறப்படுகின்றது.
கடந்த மாதம் Facebook யில் இருந்து தகவல் திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருந்தது. இவ்வாறனா சந்தர்பத்தில் இந்த நிகழ்வானது Facebook இற்கு ஒரு பாரிய அடியாகவே கருதப்படுகின்றது.
இந்த இழப்பு தொகையானது இந்தியாவின் மிக பெரிய TATA CONSULTANCY SERVICE நிறுவனத்தின் மொத்த தொகையினை பார்க்க அதிகம் என கூறப்படுகின்றது.
மேலும் இந்த பெறுமதி இலங்கை பொருளாதாரத்தினை பார்க்க அதிகம் என கூறப்படுகின்றது. இதனால் மார்க் சூகர்பெக் யின் சொத்து மதிப்பில் 15.8 பில்லியன் குறைவடைந்துள்ளது.
Facebook யின் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தங்களது மேம்படுத்தல் திட்டங்களுக்காக ஒதுக்கும் பணத் தொகையினை அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே வேலை Instagram மற்றும் WhatsApp யின் உறிமையை கொண்டுள்ள Facebook நிறுவனம் சமூக வலைதள சந்தையில் 30% இற்கும் அதிகமான இழப்பினை சந்தித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment