கையடக்கத் தொலைபேசி வைத்துள்ள அனைவரும் அதிகமாக பெண்கள் தேவையற்ற அழைப்புகளின் மூலம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக வேண்டிய பல்வேறு மேம்படுத்தல் அழைப்புகளை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு வருகின்ற தேவையற்ற அழைப்புகளை தடுப்பதற்காக வேண்டி கூகுள் நிறுவனம் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் தேவையற்ற அழைப்புகளை கண்டறியும் வசதியினை மாத்திரமே பீட்டா பதிப்பில் வெளியிட்டிருந்தது கூகுள் நிறுவனம். அவ்வாறு வருகின்ற தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தும் வசதியினையும் உள்ளடக்கி இந்த புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த "Phone" அப்ளிகேஷன் ஆனது caller ID and spam protection என அழைக்கப்படுகின்றது. தேவையற்ற அழைப்புகள் என கண்டறியப்பட்டு அவை எமக்கு வருகின்ற போது அவை சிகப்பு நிற முகப்புடன் தோன்றும். அவற்றை செட்டிங்கில் சென்று spam வகைக்குள் சேர்ப்பதன் மூலம் அவ்வாறு வருகின்ற அழைப்புகள் நேரடியாக voicemail மாற்றப்பட்டு தடுக்கப்படும்.
Screen Shot :
Download Here :
ஏனைய தொழில்நுட்பம் சார் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH





No comments:
Post a Comment