கொரோனா தொற்றை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் பாரிய சிரமப்படும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் கொரோனா தொற்றை பரிசோதிப்பதற்கான செலவும் அதிகரித்ததாகவே உள்ளது.
இதற்கான் காரணம் கொரோனா பரிசோதிப்பதற்கான கருவிகளின் பற்றாக்குறையும் அந்த கருவிகளுக்கான கொள்வனவு விலை அதிகமாக இருப்பதுமே காரணம் ஆகும்.
இந்த நிலையில் இந்தியாவில் கேரளாவில் உள்ள Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology (SCTIMST) நிறுவனம் புதிய கருவி ஒன்றினை கண்டுபிடித்துள்ளது.
Chitra Gene LAMP-N என இந்த இயந்திரத்திற்கு பெயரினை குறித்த நிறுவனம் இட்டுள்ளது. இந்த இயந்திரம் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் மிக வேகமாக நோயினை கண்டரியக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

Good Job. We are always helping you
ReplyDelete