Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

எவ்வாறு இலங்கைக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது ?

Tech Article   
Big Bit Tech Tamil
9:06 PM

 How to SriLanka connected to internet ?

How to SriLanka connected to internet ?

நாம் அன்றாடம் பயன்படுத்தும்  இணையமானது எவ்வாறு இயங்குகின்றது ? எப்படி நாடுகளுக்கு இடையில் இணைக்கப்பட்டுள்ளது ? என்று எப்பாவது நாம் யோசித்தது உண்டா ? இணையமானது நாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்ட பாதையாக காணப்படுகின்றது.


இந்த இணைப்பானது பாரிய Cable களை கொண்டு நாடுகளுக்கிடையே ஒரு வலையமைப்பை உருவாக்குகின்றது. இவ்வாறு வேகமாக தரவுகளை பரிமாற்ற உருவாக்கப்பட்டுள்ள இந்த Cable களுடைய இணைப்பானது இணையத்தின் முதுகெலும்பு (Backbone) என்று அழைக்கப்படுகின்றது.

இலங்கையில் முதல் இணைய சேவையானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த Cable களுடன் இலங்கையும் இணைப்பை ஏற்படுத்தி அதன் மூலமே எமக்கும் இணைய சேவையை வழங்குகின்றது. இலங்கை ஒரு தீவாக இருப்பதால் கடலின் ஊடக Cable கள் மூலம் இணைப்பை வழங்குகின்றது. இந்த Cable கள் Submarine cable என அழைக்கப்படுகின்றது.


இலங்கையை இணையத்துடன் இணைக்கும் Cable தொகுதி SEA-ME-WE என்றழைக்கப்படுகின்றது. இதன் அர்த்தம் SEA(South East Asia)-ME(Middle East)-WE(Western Europe) ஆகும். இந்த Cable தொகுதியானது சிங்கப்பூர் வரை செல்கின்றது.


இவ்வாறு காணப்படுகின்ற Cable மீது இலங்கை நாட்டில் உள்ள சேவை வழங்குனர்கள் முதலிட்டு அந்த சேவையினை மக்களுக்கு வழங்குகின்றனர். இவ்வாறு இலங்கையில் இந்த Cable கள் மீது முதலிட்டுள்ள சேவை வழங்குனர்கள் இலங்கை தொலைதொடர்பு கூட்டுத்தாபனம் (SriLanka Telecom) மற்றும் Dialog நிறுவனம் ஆகும்.


இவ்வாறு கடலுக்கடியல் 5 வகையான SEA-ME-WE  Cable இணைப்புக்கள் காணப்படுகின்றன. இந்த 5 Cable களிலும் இலங்கை இணைப்பினை ஏற்படுத்தி உள்ளது. 


முதலாவது SEA-ME-WE இணைப்பானது 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த Cable கள் செப்பல் (Copper) உருவாக்கப்பட்டு இருந்தது. முதலாவது இணைப்பின் உரிமத்தை SriLanka Telecom பெற்று இருந்தது. இந்த இணைப்பை Colombo யில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடை இனைத்திருந்த்தது. 


SEA-ME-WE 2 வரைபடம்
SEA-ME-WE 2 வரைபடம்


பின்னர் SEA-ME-WE யின் இரண்டாவது இணைப்பானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் உரிமமும் SriLanka Telecom இடம் இருந்தது. இந்த Cable கள் Fiber Optic மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வகை Cable கள் ஒளி வடிவில் தரவுகளை கடத்துவதால் முன்னைய இணைப்பை பார்க்க வேகமானதாக இருந்தது.


உலகில் 95 சதவீததிற்கு மேற்பட்ட இணைய பாவனையானது இவ்வகை Cableகள் மூலமே நடைபெறுகின்றது. மீதமுள்ள 5 சதவீததிற்கும் குறைவான அளவே செயற்கை கோள்கள் மூலம் இடம்பெறுகின்றன.


இந்த SEA-ME-WE யின் இரண்டாவது இணைப்பும் Colombo யில் உள்ள தரை கட்டுப்பட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த Cable ஆனது சுமார் 18700km தூரத்தினை கொண்டது. இதன் வேகம் 1.12Gbits ஆக காணப்பட்டது.


SEA-ME-WE 3 வரைபடம்
SEA-ME-WE 3 வரைபடம்

 இதன் பின்னர் SEA-ME-WE இணைப்பின் மூன்றவது Cable தொகுதி இலங்கைக்கு 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உரிமமும் SriLanka Telecom இடமே இருந்தது. இதன் நீளம் 39000 KM ஆகவும் இதன் இணைய வேகம் 4.6Gbits ஆகவும் இருந்தது. இதன் கட்டுப்பட்டு நிலையம் கல்கிஸ்சையில் அமைக்கப்பட்டு இருந்தது.  

SEA-ME-WE 4 வரைபடம்
SEA-ME-WE 4 வரைபடம்


SEA-ME-WE இன் முதல் இரண்டு இணைப்புக்களும் மூன்றவது இணைப்பு வந்தவுடன் கைவிடப்பட்டது. அனால் இப்போது மூன்றவது இணைப்புக் கைவிடும் தருவாயில் உள்ளது.


பின்னர் 2005 ஆம் ஆண்டு  SEA-ME-WE நான்காவது Cable தொகுதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் கட்டுப்பட்டு மையமும் Colombo யில் உருவாக்கப்பட்டது. இதன் உரிமமும் SriLanka Telecom யிடமே காணப்படுகின்றது. இந்த இணைப்பானது 18800Km தூரத்தினை கொண்டது.

பின்னர் SEA-ME-WE இணைப்பின் 5 ஆவது  தொகுதி 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணைப்பே தற்போதுள்ள வேகமான இணைப்பாகும். இது 20000Km தூரத்தினை கொண்டதாகும். இது மாத்தறை மூலம் Colombo யில் உள்ள SriLanka Telecom யின் Data Center ஐ அடைகின்றது. இதன் வேகம் 24Tbps வேகத்தினை கொண்டுள்ளது.

SEA-ME-WE 5 வரைபடம்
SEA-ME-WE 5 வரைபடம்


இது தவிர்ந்த வேறு சில இணைப்புக்களும் காணப்படுகின்றது இவை குறிப்பிட இடங்களை மாத்திரம் இணைக்கும் குறுகிய தூர இனைப்புக்கலாகும்.

Bharat Lanka : இந்த அமைப்பானது ஒரு Point to Point இணைப்பாகும் இது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கின்றது. இதன் தூரம் 320Km ஆகும். இதான் இலங்கை உரிமம் SLT இடமும் இந்திய உரிமம் BSNL நிறுவனத்திடமும் உள்ளது. இது இலங்கையில் கல்கிஸ்ஸையையும் இந்தியாவில் தூத்துக்குடியையும் இணைக்கின்றது.

Dhiraagu திராகு : இந்த இணைப்பானது Point to Point இணைப்பாகும். இது இலங்கையையும் மாலைதீவையும் இணைக்கின்றது. 

Bay of Bengal Gateway (BBG) : இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிங்கப்பூர் வரை செல்கின்றது. இதன் உரிமம் இலங்கை Dialog சேவை வழங்குனரிடம் உள்ளது. இதன் வேகம் 6.4 Tbps ஆகும்.


ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை படிக்க இங்கே செல்லவும்.


நன்றி

தமிழால் இணைவோம்

 BIG BIT TECH - TAMIL

Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.