Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

உங்கள் Phone தண்ணியில் விழுந்துவிட்டதா ? கவலையவிடுங்க... ! இதை செய்து பாருங்க

Tips and Trick   
Big Bit Tech Tamil
1:32 PM

How To Fix Wet Phone Simple Steps To Follow And Save Your Favorite Smartphone ?

What to do if your smartphone gets wet


Smart Phone தண்ணீரினுள் தெரியாமல் விழுந்து விட்டதா ? கவலையை விடுங்க. உங்க phone இணை காப்பாற்ற சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

தொலைபேசியானது தற்போது தவிர்க்க முடியாத இன்றியமையாத சாதனமாக அமைந்துவிட்டது. எங்கு சென்றாலும் கண்டிப்பாக நம்முடன் smart Phone இருக்கும். இதனால் பல விபத்துகளை சந்தித்து கூட இருப்போம்.

இதில் கை நழுவி கீழே விழும்போது ஒரு நிமிடம் உயிரே போய்வந்த உணர்வினை பலர் அனுபவித்து இருப்போம். அதிலும் விழுகின்ற phone தண்ணீரில் விழுந்தால் அவ்வளவுதான்.

அவ்வாறு தண்ணீரில் விழும் போது நாம் தவறான பல வழிமுறைகளை பின்பற்றுகின்றோம். அதிலும் நாம் செய்யும் சில செயற்பாட்டால் மீண்டும் தொலைபேசிக்கு உயிர் கொடுக்க முடியாமல் கூட போய் விடலாம்.

இதனால் தண்ணீரில் விழும் phone களுக்கு கொடுக்க வேண்டிய முதலுதவிகள் பற்றி பார்க்கலாம்.

முதலில் செய்ய வேண்டிய விடயங்களை பற்றி பார்க்கலாம்.

01. முதலில் விழுந்த Smart Phone இனை எடுத்து உலர்ந்த துணியால் நன்றாக துடைக்க வேண்டும்.

02.  பின்னர் தொலைபேசி ON ஆக இருந்தால் உடனடியாக OFF செய்து விட வேண்டும்.

03. SIM, Memory Card இருந்தால் அகற்றி விட வேண்டும் . Battery அகற்ற முடியுமாக இருந்தால் அதனையும் அகற்றி விட வேண்டும்.

04. Phone ஐ குறிப்பிட்ட நேரம் வரை ON செய்யாமல் வைக்க வேண்டும். முடியுமான வரை காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும்.

05. இந்த இடத்தில் அரிசி நமக்கு கைகொடுக்கும். அரிசி தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் அரிசியினுள் phone ஐ Cotton துணியால் சுற்றி வைக்க வேண்டும். இவ்வாறு 24-48 மணி நேரம் வரை அடைத்து வைத்து இருத்தல் நன்று.

செய்யக் கூடாத விடயங்களை பற்றி பார்க்கலாம்

01. Hair Dryer கொண்டு Phone இனை காயவைப்பதை தவிர்க்க வேண்டும். சூடான காற்று Phone யின் இலத்திரனியல் பகுதிகளை நாசம் செய்துவிடும்.

02.உப்பு நீரில் விழுந்த Phone இணை தூய நீரினால் கழுவ வேண்டாம். ஏனென்றால் உப்பு நீரில் விழுந்த phone ஏற்கனவே ஒக்சிஜனேற்றம் அடைந்து இருப்பதால் அது இன்னம் தூண்டுதலாக அமையும்.

03. தண்ணீரில் விழுந்த phoneயில் இருந்து நீரை வெளியேற்ற வேகமாக உதராதீர்கள். அப்படி உதறும் போது வெளியேறும் தண்ணீரை விட உள்ளே செல்லும் தண்ணீரின் அளவே அதிகமாக இருக்கும்.

04. Phone On ஆகவில்லை என்பதற்காக அவசரப்பட்டு Charging செய்து விடவேண்டாம். அது உங்கள் Phone ஐ வெடிக்க வைக்க கூட அதிக வாய்ப்பு உள்ளது.

Water Sticker என்றால் என்ன ? 

Water Sticker என்பது பல்வேறு பிரபல நிறுவனங்கள் தங்களுடைய Smart Phone களில் வெள்ளை நிற Sticker ஒன்றினை ஒட்டி இருப்பார்கள். அந்த Sticker தண்ணீர் உள்ளே சென்றுவிட்டால் சிகப்பு நிறமாக மாறும். இந்த நிற மாற்றத்தை  கொண்டே தண்ணீர் உட் சென்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.


குறிப்பு : இவை அனைத்தையும் செய்தும் தொலைபேசி On ஆகவில்லை என்றால் கண்டிப்பாக பக்கத்தில் உள்ள தொலைபேசி திருத்தும் கடைக்கு எடுத்து செல்லுங்கள்.
Tips and Trick
Big Bit Tech Tamil

Tips and Trick

1 comment

  1. yarajacqueesMarch 4, 2022 at 2:36 AM

    Harrah's Resort Southern California - MapYRO
    Get directions, 울산광역 출장안마 reviews and information 대구광역 출장안마 for Harrah's Resort Southern California in Valley Center, CA. 영주 출장안마 4-star 대전광역 출장마사지 resort near 고양 출장마사지 the beach and the

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.