Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Computer Virus – கணனி நச்சுநிரல்

Tech Article   
Big Bit Tech Tamil
11:32 PM

Computer Virus – கணனி நச்சுநிரல்


          நாம் இன்று பார்க்கவிருப்பது Computer Virus பற்றித்தான். என்னதான் நாம் இதை பற்றி பேசினாலும் இதுசம்பந்தமான போதிய அறிவு எம்மிடம் இல்லைதான். இது பற்றிய முழுமையான விளக்கத்தை நாம் இந்த ஆக்கத்தில் பார்க்கலாம்.

     சாதாரண நோயாளி ஒருவருக்கு Virus Fever வந்து கேள்விப்பட்டு இருப்போம். அவ்வாறுதான் இந்த Computer Virus உம். எவ்வாறு ஒரு நோயாளிக்கு அவரது அனுமதியின்றி ஒரு நோய் தாக்கி அவரின் தொழிற்பாடுகளை செயலிழக்க செய்கிறதோ அவ்வாறே ஒரு கணனிக்கும் நோயை உண்டாக்குகின்ற ஒரு Programming தான் இந்த Virus ஆகும்.

முதலாவதாக இந்த உலகத்திற்கு அறிமுகமான Virus “Brain A” ஆகும். இதன் படைப்பாளிகள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Basit & Farooq Alvi சகோதரர்களே ஆகும். இவர்கள் IBM இன் MS DOS Operating System ஐ இந்த Virus ஐ வைத்து 1986 January இல் தாக்கினர். அப்போது அவர்களுக்கு வயது வெறும் 17 மற்றும் 24 ஆகவே இருந்தது.


Farooq Alvi & Basit


     இந்த Computer Virus ஆனது Program ஒன்றின் ஒரு சிறிய பகுதியகவே இருக்கும். நாம் அந்த Program ஐ கணனியில் பயன்படுத்துகின்ற போது தான் அந்த Virus தொழிற்பட ஆரம்பிக்கிறது. இதன் மூலம் சிறிய அளவில் உள்ள Virus பெருக ஆரம்பித்து முழு கணணி தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

     சாதரணமாக கணனிக்கு Virus தானாக பரவுவதில்லை. கணனிகளில் நாம் இணையம் பயன்படுதுகின்ற போது, Email பயன்பாட்டின் போது, பிற சாதனங்களை கணனியுடன் இணைக்கின்ற சந்தர்ப்பம் போன்றவற்றின் ஊடக கணணிக்குள் Virus உட்செலுத்தப்படுகின்றது. இவ்வகையான Virus கள் சில தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதன் Programmer ஆல் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

     நேரத்தோடு சொன்னது போன்று ஒருவருக்கு எவ்வாறு மலேரியா, டெங்கு, சிகன்குன்யா போன்ற பல்வேறு வகையான Virus களின் தாக்கம் நோயை ஏற்படுத்துகின்றதோ அவ்வாறே Computer Virus களிலும் Trojan, Malware, Worms, Bots, Ransomware போன்ற வகைகள் உள்ளன.

     பொதுவாக Computer Virus என்று சொல்லும் போது அது Malware ஐயே குறிக்கின்றது. மற்றவை எல்லாம் இந்த Malware இன் அணியில் உள்ள அங்கதவர்கள் தான் அவற்றை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

        1.      Worms :



இது ஒரு Malware உடைய ஒரு Computer Program. இதனுடைய தன்மை தனக்கு தானே பெருக்கமடைய கூடியது. இதன் மூலம் நாம் அந்த Worm உள்ள கணனியில் வேறு சாதனங்களை இணைத்து பயன்படுத்தும் போது அதனுடைய பெருக்கத்தை அந்த சாதனத்தின் ஊடக வேறொரு கணனிக்கு கொண்டு செல்லக்கூடியது. இது பெரிதாக கணனிக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது விடினும் கணனியின் கொள்ளளவிலும் வேகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி அதன் செயல்திறனை குறைத்துவிடும்.

      2.      Virus :


இது பெருக்கமடைவது மாத்திரம் அன்றி எந்த கணனியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அந்த கணனியின் கோப்புகளையும்(Files) பாதிக்கின்றது. இதனை இயக்குவது ஒரு Host Program. இந்த Program இல்லாத சந்தர்பத்தில் இதனால் இயங்கமுடியாத சந்தர்பம் காணப்படும். இது கணனியில் உள்ள அனைத்து வகையான Files களையும் தாக்குவதோடு இது இணையத்தின் மூலமே அதிகளவு பரப்பப்படுகிறது.

      3.      Trojan :



இது சாதாரண Virus கள் போன்று அல்லாமல் இதனது செயற்பாடு கணனிகளின் கோப்புகளை அழிப்பதற்கு மாறுதலாக கணனியில் உள்ள நமது Privacy களை அந்த Program ஐ உருவாக்கியவருக்கு திறந்துகொடுப்பதோடு நமது கணணியை இலகுவாக Hack பண்ண அந்த Programmer இக்கு வழியை உருவாக்கி கொடுக்கிறது. இதனால் நமது இரகசிய குறியீடுகள், வங்கிகணக்கு சம்பந்தப்பட்ட தரவுகள் அனைத்தையும் இழக்க நேரிடும்.

      4.      Adware :


இது கணணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இதன் மூலம் கணனியில் அதிகளவான விளம்பரங்களை காட்சிபடுத்தகூடியது. இது இலவசமாக Download செய்யும் மென்பொருட்கள், பாதுகாப்பு அற்ற இணையதள பிரயோகங்கள் மூலம் ஏற்படுத்த கூடியது. இதை சாதாரண Software Developers Money Earn பண்ண பயன்படுத்துகின்ற சாதரணமான வழியாக இருந்தாலும் இதை Hackers அதிகளவான பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துகின்றனர்.

       5.      Spyware :


இது மேலே நாம் பார்த்த  Trojan Virus போன்றதாகும். இது அதை உருவாக்கிய Programmer இக்கு தனது கணனியின் Browsing Access ஐ வழங்குகிறது. இதன் மூலம் அந்த Programmer Unknown Softwareகளை அந்த கணனியின் உரிமையாளரின் அனுமதி இன்றி அந்த கணனியில் Install செய்ய உதவுகின்றது. இது கணனியில் இருப்பதே தெரியாத அளவிற்கு தன்னுடைய தொழிற்பாட்டை மேற்கொள்ளும்.

      6.      Spam :


இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். உங்களுடைய Gmail இல் இது காணப்படும். இது உங்களை ஆர்வமூட்டக்கூடிய ஒரு Promotion மின்னஞ்சல் வடிவில் எமக்கு வரும். இப்படியான Spam Mail or Junk Mail இல் Programmer Trojan மற்றும் Virus களை இணைத்து அனுப்பி விடுவார்கள். இதன் மூலம் இலகுவாக நமது கணணி Virus தாக்குதலுக்கு உள்வாங்கப்படுகிறது.

       7.      Bots :


இது Worms இன் ஒரு Advance Version போன்றது. இது Worms செய்கின்ற வேலைகளை துல்லியமாக செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Bots ஆனது நல்ல விடயங்களுக்கும் பயன்படுத்தகூடியது. இதை Hackers உருவாக்கி தங்களுடைய Target Device இக்கு அனுப்பியதும் அது அவர்களுக்கு தகவல்களை திருடி கொடுக்கவும், Network Trace பண்ணவும், இரகசிய தகவல்களை எடுக்கவும் உதவுகின்றது

      8.      Ransomware :


இது ஒரு வகையான Malware program தான். இது உங்களுடைய System ஐ Encrypt செய்து அதை வேலை செய்யாமல் Lock  செய்துவிடும். இதுக்கு உதாரணமாக அண்மையில் நாம் கேள்விப்பட்ட Wanna Cry Ransomware ஐ சொல்லலாம். இது உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள கணனிகள் Hacker மூலம் Hack செய்யப்பட்டு அவர்களுக்கு பணம் செலுத்தினால் தான் மீள Unlock செய்யப்படும் என ஒரு கட்டளையை இட்டது. இது அண்மைகாலத்தில் அதிகம் பேசவைத்த Computer Virus ஆகும்.

Wanna Cry



இத்தகைய Virus கள் பயன்படுத்த ஒரு நோக்கம் Hacking மீது உள்ள அதீத ஈடுபடும், பிற நிறுவனங்கள் மீது உள்ள போட்டிதன்மையும் மிகமுக்கியமாக பணத்திற்காகவும் தான். அண்மையில் பாதிப்பை ஏற்படுத்திய “Wanna Cry Ransomware” Virus உடைய Hacker கூறியதும் பசி, பட்டினியில் வாடும் மக்களுக்கு பணத்தை வழங்கவே என கூறினார்.

ஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை காணப்பட்ட Virus களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.


     1)    Self-Reproducing Automata (1949-1966)
     2)      Core Wars (1959)
     3)      The Creeper (1971)
     4)      Wabbit(Rabbit )- 1974
     5)      Animal (1974-1975)
     6)      Elk Cloner (1981)
     7)      Virus (1983)
     8)      Brain A (1986)
     9)      Lehigh (1987)
   10)  Cascade
   11)  Jerusalem Virus
   12)  The Morris Worm (1988)
   13)  Concept (1995)
   14)  Baza (1996)
   15)  CIH Virus (1998)
   16)  Happy99 (1999)
   17)  I Love You (2000)
   18)  Anna Kournikova (2001)
   19)  LFM-926 (2002)
   20)  My Doom (2004)
   21)  Samy XXA (2005)
   22)  OSX/Leap-A (2006)
   23)  Strom Worm (2007)
   24)  Zeus
   25)  Koobface (2008)
   26)  Kenzero (2010)
   27)  Cryptolocker (2013)
   28)  Backoff (2014)
   29)  Wanna Cry (2016)


இந்த ஆக்கம் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என நாம் நம்புகிறோம். நீங்கள் இந்த ஆக்கம் சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால் கண்டிப்பாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH




    


Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.