Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

RAM – Random Access Memory

Tech Article   
Big Bit Tech Tamil
10:37 PM

RAM – Random Access Memory

RAM – Random Access Memory


நாம் இன்று கணனியின் முக்கிய பாகம் ஒன்றை பற்றியே இந்த ஆக்கத்தில் பார்க்க இருக்கிறோம். RAM கணனியின் ஒரு ஆற்றல் என்றே சொல்லலாம். மிக முக்கியமான தொழிற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கணனியின் வன்பொருளே இந்த RAM ஆகும். இது எந்த சாதனத்தில் பயன்படுகிறதோ அந்த சாதனத்தின் வேகத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.


RAM இன் ஒரு முக்கிய தொழிற்பாடு கணனியில் ஒரு செயற்பாடு நடைபெறும் போது அதனுடைய தொழிற்பாடு முடிவரையும் வரை தட்காலிகமாக அதை அழியாமல் வைத்திருக்கும். பின் அதன் செயற்பாடு முடிவடைந்ததும் அதில் அழியாமல் வைத்திருந்த தரவுகளும் அழிந்துவிடும். அதனால் இதனை Non Volatile Memory (அழியத்தகு நினைவகம்) என அழைக்கப்படுகிறது.

RAM – Random Access Memory

இந்த RAM ஆனது கணனியில் ஒரே நேரத்தில் பல்வேறு தொழிற்பாடுகளை சிரமம் இன்றி செய்ய பேருதவியாக இருக்கிறது. எந்த கணனியில் RAM இன் தொழிற்பாடு வேகமாக இருக்கிறதோ அந்த கணனியில் User Interface உம் சிறப்பாகவே இருக்கும். இந்த RAM இன் கொள்ளளவுக்கு ஏற்ப அதன் தொழிற்பாடுகள் வேறுபடுகின்றது. அதட்கேட்ப RAM இன் கொள்ளளவு ஆரம்பத்தில் 128MB யில் இருந்து 16GB வரை தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்நுட்ப முனேற்றதிட்கு ஏற்ப அதிகரித்தே செல்கிறது.


RAM ஆனது ஒரு கணணி தரவு சேமிப்பகத்தின் ஒரு வடிவமாகவே இருக்கிறது. இது இயந்திர குறியீடுகள் மற்றும் தரவுகளை சேமிக்கின்றது. RAM ஆனது ஒரு சீரற்ற அணுகல் முறையை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பலவற்றை வாசிக்கவோ எழுதவோ அனுமதிக்கிறது. இது Hard Disk, DVD மற்றும் Flash Drive போன்ற பிற நேரடி அணுகல் ஊடகங்களுடனும் சேர்ந்து படிக்ககூடிய தன்மையை இது கொண்டுள்ளது. இதனால் இது ஒரு Multi-Function தொழிற்பாட்டை கொண்டுள்ளது.


RAM – Random Access Memory


உதாரணமாக நாம் குறிப்பிட்ட ஒரு தொழிற்பாட்டை செய்வதற்காக CPU இற்கு கட்டளையை பிறப்பிக்கும் போது. RAM ஆனது உடனடியாக அந்த தொழிற்பாட்டிற்கு தேவையான தரவுகளை Hard Disk இல் இருந்து சேகரித்து வைத்து இருக்கும். நமக்கு தேவைப்படுகின்ற போது அது அதன் சேமிப்பில் உள்ள தரவுகளை தருகின்றது. இதுவே இதனது பிரதான தொழிற்பாடாக இருக்கிறது.

RAM – Random Access Memory
Mobile RAM

உங்களுடைய Smart Phone ஐ பொருத்தமட்டில் அதில் பயன்படுகின்ற RAM அந்த Smart Phone இன் வேகத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. நாம் பொதுவாக ஒரு Smart Phone இல் ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளை செய்வோம் இதற்காக அந்த RAM அதன் கொள்ளளவை பிரித்து வழங்குகிறது. இதனையே Multi-Function என்று அழைக்கின்றோம்.


இந்த RAM இணை அடிப்படையாக வைத்து உருவாகிய இதன் பாகங்களை பற்றி பார்க்கலாம்.

1. DDR :

இது 1st Version of Ram ஆகும். இதனது வேகம் ஒரு செக்கன் இக்கு 3Gbps வரை இருக்கும்.

2. DDR2 :

இதனது வேகம் ஒரு செக்கனுக்கு 6Gbps வரை இருக்கும்.

3. DDR3 :

இதனது வேகம் செக்கனுக்கு 8Gbps இல் இருந்து 15Gbps வரை இருக்கும்.

4. DDR4 :

இதனது வேகம் 17Gbps இருந்து 21Gbps வரை இருக்கும்

5. DDR5 :

இது தற்காலத்தில் பாவனையில் இல்லை என்றாலும் 2020 காலத்தில் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது.


DDR என்றால் என்ன என்று பார்த்தல் Double Data Rate என்று அழைக்கப்படும்.


Note :
SMART PHONEகளில் RAM தொழிற்படும் போது உஙகளடைய RAM 2GB என்றால் அது உங்களது பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்கும். உதாரணமாக நீங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்யும் போது SYSTEM-52%, GAME-20%, MESSAGE-8%, SOCIAL MEDIA-15%, FREE RAM-5% இவ்வாறு RAM தொழிற்படும்.



RAM பற்றி உங்களுக்குள் இருந்த ஒரு சந்தேகம் இப்போது தீர்ந்து இருக்கும் என நம்புகிறோம். ஆகவே நீங்கள் உங்களது கணணிக்கோ அல்லது Smart Phone இக்கோ RAM ஒன்றை தெரிவு செய்யும் போது நீங்கள் சுயமாகவே முடிவெடுக்ககூடிய சந்தர்பத்தையும் அறிவையும் இந்த ஆக்கம் உங்களுக்கு வழங்கி இருக்கும் என நாம் நம்புகிறோம்.


எமது ஆக்கம் தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்கள் இருந்தால் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.