Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

History of Albert Einstein - வாழ்க்கை வரலாறு

History   
Big Bit Tech Tamil
9:02 PM

History of Albert Einstein - அல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு




இவரை பற்றி அறிந்த விடயங்களை விட அறிய வேண்டிய விடயங்கள் அதிகமே. நாம் இன்று அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் Albert Einstein என்ற மாகா மேதையின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த ஆக்கத்தில் பார்க்கலாம்.

 
Parents of Einstein

இவர் 4th March 1879 இல் Germany இல் Ulm எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை Herman Einstein. இவர் ஒரு மின்வேதியல் சம்பந்தமான ஒரு தொழிலை புரிந்து வந்தார். இவரது தாய் Proline Coach. Albert Einstein தனது 3 வயது வரை பேசமுடியாமல் இருந்தார். இதனால் இவர்களது பெற்றோர் மிகவும் அஞ்சினர். பின்னர் பெசதொடங்கினாலும் பாடசாளையில் மந்தமான நிலையிலேயே இருந்தார். விளையாட்டில் பொழுத கழிப்பதையும் Einstein பெரிதாக விரும்பவில்லை.

செயல்பாட்டு வேகம் குறைந்த நிலையில் இருந்த Einstein ஒழுங்காக எழுத பெசதேரியாமலே 10 வயதுவரை இருந்துள்ளார். ஒருமுறை இவரது தந்தை தலைமை ஆசிரியரிடம் தனது மகன் எந்த தோழில் செய்ய உகந்தவர் என்று கேட்டதுக்கு அவர் கொஞ்சமும் யோசிக்காமல் “அவன் எதிலும் உருப்படப்போவதில்லை” என்று கூறினார்.

Einstein in Childhood

Einstein சிறுவயதில் வயலின் கற்பதில் மிக ஆர்வம் காட்டினர். அவரது தாய் அதற்கு ஊக்குவிப்புகளை வழங்கினார். Einstein இன் அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு சாதாரண Magnetic Compass தான் அடிப்படை என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா. ஆம் Einstein  5 வயதாக இருந்த போது அவர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்போது அவரது தந்தை Magnetic Compass ஐ கொடுத்தார்.


அதுவே அவரது சிந்தைக்கு அடிப்படையாக இருந்தது. அண்டவெளியில் ஒரு ஊசி எவ்வாறு இயங்குவது ? அண்டவெளியில் உள்ள ஏதோ ஒன்றுதான் அதை இயக்குகிறது என்றெல்லாம் சிந்திக்கத்தூண்டியது. அதுவே அவரை காந்தசக்தி, புவிஈர்ப்பு சம்பந்தமாக சிந்திக்க தூண்டியது. Apple விழுந்த கதையை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். இவ்வாறு அவரது வாழ்கையில் நடந்த சின்ன சின்ன விடயங்கள் அடிப்படையாக இருந்தது.


தெரிந்துகொள்ளுங்கள் :
Einstein வயலின் வாசிப்பதில் அதிக ஆர்வம் இருப்பது. இசைமேதை Mosaat இன் தீவிர ரசிகராக இருந்தார். மேலும் Einstein இக்கு என்று தனியான Science Lab இருந்ததே இல்லை. எந்த ஒரு ஆய்வாக இருந்தாலும் கற்பனை மூலமே அதற்கு தீர்வை கண்டுகொள்ளும் வல்லமை மிக்கவர்.

     இவருக்கு கணிதத்துரையிலும் அறிவியலிலும் அதிக ஆர்வம் காணப்பட்டது. இதனால் தனது 12 வயதில் கணிதம் கற்க ஆரம்பித்தார். இதனால் அவர்களது உறவினர்களும் அவரை ஊக்கப்படுத்தினார். 1898 இல் Einstein  Switzerland இன் புகழ் பெற்ற பல்கலைகழகமான Swizz Petrel Polytechnic இல் சேர்ந்தார் முதல் வருடம் தேர்வு பரிட்சையில் தோற்றாலும் அடுத்தவருடம் சேர்ந்துகொண்டார்.
    
     பின் 1900 ம் காலப்பகுதியில் Einstein தனது சொந்த நாடான Germany இன் குடியுரிமையை இழந்து நாடற்றவர் ஆனார். பின் 1901 இல் Switzerland இன் குடியுரிமையை பெற்றுக்கொண்டார். கற்பித்தல் சம்பந்தமான Diploma வை பெற்ற Einstein கற்பித்தல் சம்பந்தமான தொழில் கிடைக்காமையால் சுவிட்சர்லாந்தின் காப்புரிமை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

     பின் தன் கல்லூரி காலத்து காதலியான Mileva Maric என்பவரை 6th January 1903 இல் மணந்துகொண்டார். இதன் மூலம் இவருக்கு Hans Albert Einstein மற்றும் Eduard என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். பின் 1905 இல் ஜூரி பல்கலைகழகத்தில் பௌதீக விஞ்ஞானதில் PHD பட்டதாரி ஆனார்.

with Mileva Maric

     பின் கண்ணுக்கு புலப்படாத அணுவை பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் அண்டவெளியை பற்றியும் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். Einstein Theory of Relativity என்ற கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் Einstein.  இதுவே சார்பியல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

     இவருக்கு 26 வயதாக இருக்கும் போது “எந்த ஒரு பொருளும் இயங்கும் நிலையிலோ அல்லது ஓய்வு நிலையிலோ ஒரு குறிப்பிட்ட சக்தியை கொண்டிருக்கும்” என Einstein அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் உருவான சமன்பாடுதான் E=MC2 என்பதாகும். இந்த சமன்பாடுதான் உலக விஞ்ஞானிகளுக்கே அடிப்படை மந்திரமாகும்.
  
     இவைதவிர Electron களின் செயல்பாட்டை விளக்கும் Photoelectric Effect, அணுக்களின் துணை துகள் தொழிற்பாட்டை விளக்கும் Quantum Theory போன்ற விடயங்களை Einstein உலகுக்கு விளக்கினார். போட்டான்கள், ஒளியின் வேகம், பிரபஞ்சத்தின் இயக்கம் போன்ற ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.


With Elsa

     பின் தனது மனைவியின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவருடன் இருந்த உறவை 1919இல் முடித்துகொண்டார். பின் தன்னை பார்துகொள்ளகூடிய ஒரு உறவை தனது குடும்பத்தில் இருந்து திருமணம் செய்துகொண்டார். அவளது பெயர் Elsa Lowenthal. அவளும் சிறிது காலத்திலேயே இறந்துவிட்டால். இதன் பின் திருமணமே பண்ணாமல் 20 ஆண்டுகள் இருந்தார்.



     பின் இவரும் இவருடன் இருந்த விஞ்ஞானிகளும் அமெரிக்க ஜனாதிபதியான Roosevelt இக்கு கிட்லர் அனுகுண்டுதயாரிப்பதை கடிதம் மூலம் விளக்கி எழுதினார். இதனை பார்த்த Roosevelt தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அணுகுண்டு தயாரிக்க Einstein இடம் கேட்டார். இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த Einstein பின் இணங்கினார். பொருள் சக்தி மாற்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

     பின் அமெரிக்க அந்த அணுகுண்டை ஜப்பான் மீது வீசியதை கேள்விப்பட்டு தேம்பி தேம்பி அழுததாக வரலாறுகள் சொல்கின்றன. பின் 1921 இல் இயற்பியலுக்கான Nobel பரிசை வழங்க Nobel குழு விரும்பியது. அனால் அந்த கோட்பாட்டில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பின் Photoelectric Effect என்ற கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது.

     Einstein 18th April 1955 இல் தனது 76 வது வயதில் காலமானார். இவரின் இறப்பிற்கு பின் இவரது மூளை ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அது சுமார் 240 பகுதிகளாக பிரித்து ஆய்வுக்கும் உட்பட்டது. இவரது மூலையில் அதிகளவான மடிப்புக்களும் பள்ளங்களும் இருப்பது ஆய்வுகளில் உறுதியானது. மேலும் மூளையின் ஆராய்ந்து யோசிக்கக்கூடிய திறன் பகுதி அளவில் பெரிதாக இருந்ததும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.




     இந்த ஆக்கம் Albert Einstein பற்றி உங்களுக்கு இருந்த எண்ணத்தை இன்னும் அதிகபடுத்தி இருக்கும் என நம்புகிறோம். இது சம்பந்தமான உங்களுடைய கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

History
Big Bit Tech Tamil

History

1 comment

  1. UnknownMarch 7, 2022 at 12:44 AM

    I want more information in Tamil.. only fact news I want

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.