Thomas Alva Edison – வாழ்க்கை வரலாறு
பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர்,
இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோசனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும்
அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தோமஸ் அல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றுப் பார்வையை
இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பார்க்கலாம்.
Thomas
Alva Edison 11th February 1847 ம் ஆண்டு America யில் Ohio
வில்
உள்ள Milan எனும்
ஊரில் பிறந்தார். இவரது தந்தை Samuel Edison ஒரு மர
வியாபாரியாக இருந்தார். தாய் Nancy Edison ஒரு ஆசிரியையாக
பணியாற்றினார். இவர்களது நடுத்தர குடும்பத்தில் 7வதும்
கடைசியாகவும் பிறந்தவர்தான் Thomas Alva
Edison.
தனது 8 வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட Edison பள்ளியில் சோம்பேறியாகவும் படிப்பில் மந்தமாகவும்
இருந்தார். பின் பள்ளியில் இருந்து நின்ற Edison
இக்கு
தாய் பள்ளிப்படிப்பை கற்பித்தார். இதோடு சேர்ந்து சமய நூல்கள், அறிவியலாளர்களின்
புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
தனது 12வது வயதில் Edison
தனது
பெற்றோரை சம்மதிக்க வைத்து புகையிரத நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதை
ஆரம்பித்தார். மேலும் அங்கே ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி தனது சொந்த
பத்திரிகையான Grand Trunk Herald ஐயும்
அச்சிட்டு வெளியிட்டார். பின் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் தனது ஆய்வுகூடத்தை
நிறுவி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
ஒருமுறை தான் ஒரு ஆராய்ச்சியில்
ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது புகையிரதம் திடீர் என்று நின்றதில் அவரது ஆய்வுகூடத்தில்
இருந்த இரசாயணம் கீழே கொட்டியதால் அந்த புகையிரதம் தீப்பிடித்தது. இதனால் கோபம்
அடைந்த புகையிரத அதிகாரி அவரது கன்னத்தில் ஓங்கி அடித்ததில் அவரது ஒருபக்க காதும்
அவரது ஆயுள் வரை கேளாமலே போனது.
Edison
யின்
ஏன்? எவ்வாறு ?
என்று கேள்விகேட்கும் குணம் தான் அவரை 1000
இற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. ஒறு முறை Edison கோழி அடைகாத்து குஞ்சுபொறிப்பதை பார்த்து தானும்
ஏறி இருந்து குஞ்சு பொறிக்க முயன்ற கதையையும் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த யோசிக்கும் திறனே அவரை இன்றும் உலகம் போற்றற வைத்திருக்கிறது.
ஒருமுறை Edison
பத்திரிகை
விற்றுக்கொண்டு இருக்கும் போது புகையிரத அதிகாரி ஒருவரின் குழந்தை தண்டவாளத்தில்
புகையிரதம் வருவதை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்தது. அதை காப்பாற்றியத்தில்
புகையிரத அதிகாரி நன்றிக்கடனாக Edison இக்கு சமிக்ஜை
அனுப்ப கற்றுக்கொடுத்து அந்த வேலையையும் வாங்கி கொடுத்தார்.
சமிக்ஜை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை
அனுப்பவேண்டி இருந்தது. இதனை யோசித்த Edison
தன்னியங்கி
மூலம் தானாகவே சமிக்ஜை அனுப்பும் முறையை கண்டுபிடித்தார். மேலும் புகையிரத நிலையத்தில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்த இயந்திரத்தையும்
கண்டுபிடித்தார். இதில் இருந்து இவரது கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் தொடர்ந்தது.
பின் தனது தாய் தந்தையின் வறுமை காரணமாக தன்
நண்பனின் உதவியுடன் Western Union
Company ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின் Edison 1870 இல் New
Jersey இல் ஒரு நிறுவனத்தை நிறுவி சில இயந்திரவியலாளர்களையும்
வேலைக்கு அமர்த்தினார். 1876 ம்
ஆண்டு Edison தனது
ஆய்வுகூட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சுயாதீன தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தை
உருவாகினார்.
1877
யில் Edison ஒலிகளை பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை
கண்டுபிடித்தார். அது ஒலிவரையி (Phonograph) என அழைக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் பின் Edison இன் ஆராய்ச்சியானது ஒளியை நோக்கி இடம் பெயர்ந்தது.
இதன் பின் Edison இன்
மின் விளக்கு பற்றிய ஆய்வு ஆரம்பம் ஆனது.
Edison with Phonograph |
மின்விளக்கு பற்றிய ஆய்வுக்காக J.B.Marcan குழுவினர் நிதியுதவி செய்தனர். Edison உடன் பிரின்ஸ்டன் பல்கலைகழக பட்டதாரியான 26 வயது Francis
Upton இணைந்து கொண்டார். இவர் Edison
இக்கு
பேருதவியாக இருந்தார். இந்த
ஆராய்சிக்காக 50 வேலையாட்களை
களம் இறக்கி இருந்தான் Edison. கிட்டத்தட்ட
1500
ஆய்வுகள் தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக 21st
October 1879 ஆம் ஆண்டு இவரின் வெற்றி உறுதியானது. இவரது
கண்டுபிடிப்பு உலகத்தையே ஒளிமயமாக்கியது.
Phonography எப்படி
காதுக்கு ஒலியை கொண்டு சேர்கிறதோ அவ்வாறே கண்ணனுக்கு ஒளியைகொண்டு சேர்க்க பேசும்
படங்களை உருவாக்கும் திரைப்பட கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். 1888 இல் முதன் முதலாக திரைப்பட கருவியை
உருவாக்கினார். அதன் பெயர் Kinetoscope என
அழைக்கப்பட்டது. இதன் படம் சற்று மங்களாகவே தெரிந்தது. இதன் பின் இவரது
கண்டுபிடிப்புகள் டைனமோ, X-ray
Machine என்று இவரது கண்டுபிடிப்பின் பட்டியல்
நீண்டுகொண்டே சென்றது.
Edison
1871 இல் Mary Stilwell என்ற 16 வயது பெண்ணை திருமணம் முடித்தார். இதன் மூலம் இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். Marion, Thomas மற்றும் William ஆகும். 1884
ஆம்
ஆண்டு மூலையில் கட்டியின் காரணமாக Mary
Stilwell இறந்தார். பின் தன்னைவிட 19 வருடங்கள் இளமையான Mina Miller என்பவரை திருமணம் செய்தார்.
18th
October 1931 இல் தனது 84 வது
வயதில் எடிசன் நீரிழிவு நோயினால் இறந்தார். இதற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக America முழுவதும் ஒரு நிமிடம் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது.
இவர் இறந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள் இன்றுவரை வாழ்ந்து கொண்டேதன் இருக்கிறது.
இவருக்கு கிடைத்த விருதுகளின் குறிப்பிட்ட சிலவற்றின் பட்டியலை
இங்கு பார்க்கலாம்.
1.
Matteucci Medal in
1887.
2.
John Scott Medal in
1889
3.
Edward Longstreath
Medal in 1899
4.
John Fritz Medal in
1908
5.
Franklin Medal in
1915
6.
Navy Distinguished
Medal in 1920
7.
American Institute
of Electrical Engineer in 1923
8.
National Academy of
Science in 1927
9.
Congressional Gold
Medal in 1928
Thomas Alva Edison பற்றிய முழுமையான ஒரு வாழ்க்கை
வரலாற்றை இந்த ஆக்கத்தில் பார்த்தோம். இது சம்பந்தமான சந்தேகங்கள் கருத்துகள்
இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment