Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

How to Work Computer - கணனி தொழிற்படும் விதம்

Tech Article   
Big Bit Tech Tamil
7:36 PM

How to Work Computer




            இன்றைய சூழலில் கணனியை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். அதிகமாக காணப்படும் கணனியின் பயன்பாட்டில் எவ்வாறு ஒரு கணனி தொழிற்படுகிறது என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் “ Switch போட்ட Power வரும், Computer ON ஆகிடும் ” இதுவாகத்தான் இருக்கும். அனால் உண்மை அதுவல்ல. இந்த ஆக்கம் நீங்கள் தெரியாத ஒரு புதுவிடயத்தை கண்டிப்பாக உங்களுக்கு தரும்.

     நீங்கள் கணனியை தொடங்குவதற்கு Power ON செய்தவுடன் அந்த கணனியில் பல்வேறு தொழிற்பாடுகள் ஒரு 2 நிமிடத்திற்குள் நடந்து முடிவடைந்துவிடும். அவற்றை பற்றி நாம் பெரிதாக அறிந்துகொள்ள முற்பட்டதில்லை.


BIOS Output


     கணனியில் காணப்படுகின்ற வன்பொருளை நாம் நினைத்தவாறு எமது கட்டளைகளுக்கு எவ்வாறு செவிமடுக்கிறது என்று நாம் என்றாவது யோசித்ததுண்டா? அதற்கு கணனியில் காணப்படும் BIOS என்ற மென்பொருளே காரணம். அது கணனியில் உள்ள வன்பொருட்களுடன் நேரடியாக உரையாடி நமக்கு ஏற்றால்போல் அவற்றை நம் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கிறது.

     கணனியினை நாம் ON செய்யும் போது கணனியில் Motherboard யில் காணப்படும் ROM யில் ஏற்கனவே Program செய்து வைக்கப்பட்டுள்ள BIOS என்ற மென்பொருளானது தொழிற்பட ஆரம்பிக்கிறது. இதனால் கணனியின் அனைத்து கட்டுப்பாடுகளும் இப்போது BIOS இக்கு செல்கிறது. நீங்கள் கணணியை ON செய்தவுடன் ஒரு Black Screen யில் அதிகளவான Text வந்தவண்ணம் இருக்கும். இது BIOS தொழிற்படும் விதம் ஆகும்.



     இந்த தொழிற்பாட்டை Post Operation என சொல்வார்கள். அதாவது கணனியுடன் என்ன என்ன சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது என பரிசோதனையில் ஈடுபடும். இதன் மூலம் கணனியில் உள்ள RAM இன் அளவு, Keyboard, Mouse, Printer, Hard Disk போன்றன இணைக்கப்பட்டுள்ளதா எனவும் இது பரிசோதிக்கும். இதனை Power On Self Test எனவும் அழைகின்றனர்.

     உதாரணமாக நீங்கள் Mouse இணைக்காமல் Power On பண்ணினால் கணணி இயக்கத்தின் போது Mouse இணைக்கும் போது அது வேலை செய்யாத சந்தர்பம் காணப்படும். இதற்கு காரணம் BIOS இன் போது அது தனது நினைவில் Mouse இணைக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கும். இதனால் புதிதாக Mouse இணைக்கப்பட்டால் Restart செய்து மீண்டும் BIOS செயன்முறைக்கு உட்படுத்தி வேலைசெய்ய  வைக்கிறது.


     இவ்வாறு Self-Test செய்யும் போது கணனியில் RAM, Hard Disk என்பவற்றில் ஏதேனும் தொழிற்பாடு பிழை காணப்படும் எனின் கணனியில் இருந்து Beep Sound வந்தவண்ணம் இருக்கும். எந்த ஒரு பிழையும் இல்லை என்ற பின் BIOS யில் ஏற்கனவே Configures செய்து வைக்கப்பட்டுள்ள Booting Sequence எந்த Hard Disk யில் பதியப்பட்டுள்ளதோ அங்கே Operating System (Windows,Linux,Mac) பதியப்பட்டு இருக்கும். அப்போது BIOS ஆனது தன்னிடம் இருந்த கட்டுப்பாட்டை OS இடம் ஒப்படைத்துவிடும்.

     இந்த Operating System ஆனது நம்மையும் கணனியையும் தொடர்புபடுத்தும் ஒரு காரணியாக இருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு Chinese ஒருவருடன் உரையாடும் போது உங்களுக்கு Chinese தெரியாத சந்தர்பத்தில் அதற்காக இடையில் Chinese Translator ஐ உபயோகப்படுத்துவோம். அப்படியான ஒரு தொழிற்பாட்டை செய்வதே இந்த Operating System யின் வேலை ஆகும்.



     Operating System ஆனது கணனியுடன் Binary (0,1) முறையிலேயே தொடர்பை ஏற்படுத்தும், இதனால் நாம் English Language இல் கொடுக்கும் கட்டளைகளை இந்த Operating System ஆனது Binary முறைக்கு மாற்றி பின் கணனியில் இருந்து கிடைக்கும் Binary யிலான பதிலை எமக்கு வழங்குகிறது. இதனால் கணணியுடனான தொடர்பை இன்னும் அதிகப்படுத்துகிறது .



     ஆகவே ஒரு கணணி ஒன்றின் இயக்கம் ஆரம்பிக்கும் போது என்ன மாற்றம் நடக்கிறது என்பது இப்போது உங்களுக்கு மிக தெளிவாக புரிந்து இருக்கும். இந்த ஆக்கம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் கருத்துகள் இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.