அமெரிக்காவில் காணப்படுகின்ற மொபைல் வலையமைப்புகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் இந்த Verizon நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது இணைய வழங்குனர் சேவையில் முதன்மையாக உள்ள நிறுவனமாகும்.
தற்போது இந்த நிறுவனமானது பரீட்சார்த்த நிலையில் இருந்த 5G தொழில்நுட்பத்தினை தற்போது மக்கள் பாவனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செயற்பாட்டினை Google மற்றும் Apple நிறுவனத்தின் அனுசரனையுடன் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் கூகுள் தரப்பில் YouTube TV இணையும் Apple தரப்பில் Apple 4k TV யும் இந்த வலையமைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மாத்திரமே இந்த வசதி வழங்க உள்ளதாக கூறியுள்ள Verizon நிறுவனம் அந்த இடங்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
1.Houston
2.Sacramento
3.Los Angels
4.Indianapolis
தகவல் தொழில்நுட்பம் சார் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
No comments:
Post a Comment