Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

History of Isaac Newton - வாழ்க்கை வரலாறு

History   
Big Bit Tech Tamil
5:23 PM
isaac newton history in tamil, Isaac Newton Biography in Tamil, isaac newton isaac newton achievements isaac newton apfel isaac newton apple isaac newton biografie isaac newton biography isaac newton books isaac newton calculus isaac newton childhood isaac newton contribution isaac newton death isaac newton deutsch isaac newton discoveries isaac newton education isaac newton entdeckungen isaac newton erfindungen isaac newton facts isaac newton family isaac newton fun facts isaac newton grave isaac newton gravitation isaac newton gravity isaac newton height isaac newton history isaac newton house isaac newton institute isaac newton inventions isaac newton iq isaac newton james gleick isaac newton job isaac newton jungfrau isaac newton kids isaac newton known for isaac newton ks2 isaac newton law of gravity isaac newton laws of motion isaac newton lebenslauf isaac newton math contributions isaac newton meme isaac newton movie isaac newton nationality isaac newton net worth isaac newton newtown isaac newton occupation isaac newton opticks isaac newton origin isaac newton principia isaac newton principia pdf isaac newton quotes isaac newton wife

Isaac Newton பற்றி அறிந்திடாத எவரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.Apple பழத்தினை வைத்து புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்த கதையினை நாம் சிறு வயதில் இருந்து கேட்டு இருப்போம். இவரால் உருவாக்கப்பட்ட பல கோட்பாடுகளே இன்று வரை பல கண்டுபிடிப்புகளுக்கும் பல அளவீடுகளுக்கும் உறுதுணையாக காணப்படுகின்றது. இவ்வாறு உலகமே போற்றும் Isaac Newton யின் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிப்பின் வாயிலாக பார்க்கலாம்.


Isaac Newton Biography in Tamil

Isaac Newton ஒரு கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார். 1642 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள Lincolnshire எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் Isaac Newton. இவர் பிறந்து மூன்று மாதத்தில் தந்தை இறந்துவிட்டார். இவரது தாயின் பெயர் Hannah Ayscough.  


தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் தாய் மறுமணம் செய்துகொண்டு தனது தாய் வழி பாட்டியான Margery Ayscough விடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். Isaac Newton இற்கு தனது இரண்டாவது தந்தையினை பெரிதாக பிடிக்கவில்லை. இந்த திருமணத்தின் மூலம் Isaac Newton யின் தாயிற்கு மூன்று குழந்தைகள் இருந்தன.

பின்னர் Isaac Newton தன்னுடைய பாடசாலை கல்வியை The King's School Grantham யில் தனது  12 ஆவது வயதில் இருந்து 17 ஆவது வயது வரை பயின்றார். அங்கு அவர் பண்டைய லத்தீன் மற்றும் கிரேக மொழியினை கற்றார். இது கணிதத்தின் குறிப்பிடத்தக்க அடிப்படை அறிவினை வழங்கியது.


பின்னர் தனது இரண்டாவது தந்தையின் மரணத்தின் பின்னர் தாய் அவரை பள்ளியில் இருந்து விளக்கி விவசாயத்தினை செய்யும் படி வற்புரித்தினார். எனினும் விவசாயம் செய்யும் மனநிலையில் Isaac Newton இல்லை.


The King's School யில் கற்பித்த ஆசிரியர் Henry Stokes யின் முயற்சியால் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார் Isaac Newton.  சூரிய கடிகாரம் மற்றும் காற்றலைகளின் மாதிரிகளை உருவாக்கியதன் மூலம் ஒரு தனிநிலை மாணவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

1661 ஆம் ஆண்டு ஜூன் மாதம் Cambridge யில் உள்ள Trinity Collage யில் கல்வி கற்ற Isaac Newton யின் மாமா William Ayscough யின் உதவியால் அதே கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றார். பின்னர் 1664 வரை அங்கு பகுதி நேர தொழிலினை செய்துகொண்டு தனது MA பட்டப்படிப்பினை தொடர்ந்தார்.


அந்த காலகட்டத்தில் கல்லூரியில் Aristotle யின் தத்துவங்கள் அடிப்படையாக கொண்டே கல்விப் பாடங்கள் போதிக்கப்பட்டு வந்தன. ஆனால் Isaac Newton நவீன தத்துவ ஞானிகளான Descartes மற்றும் Galileo போன்ற வானிலையாளர்களான ஈர்க்கப்பட்டு இருந்தார்.

இவர் தனது குறிப்பேட்டில் இயந்திர தத்துவம் பற்றிய கேள்விகளின் தொடரை கண்டுபிடித்தார். 1665 யில் பொதுமைப்படுத்தப்பட்ட Binomial தேற்றம் மற்றும் கணித கோட்பாட்டை உருவாக்க தொடங்கினார். பின்னர் அது Calculus என்றழைக்கப்பட்டது.


1665 யில் தனது BA பட்டத்தினை பெற்றதோடு Great Plague யினால் உலகமே பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக பல்கலைகழகம் மூடப்பட்டது.  அதோடு Isaac Newton நிறுத்தாமல் Woolsthrope யில் இருந்த அவரது வீட்டில் இரண்டு வருடங்களுக்கு Calculus கோட்பாடு, ஒளியியல் மற்றும் ஈர்ப்புவிதிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டர்.


1667 யில் மீண்டும் Cambridge பல்கலை கழகத்திற்குள் நுழைந்தார் அங்கு Trinity இற்கு தெரிவும் செய்யப்பட்டார். Isaac Newton யின் ஆய்வுகள் பேராசிரியர் Isaac Barrow இணை கவர்ந்தது.  பின்னர் இரண்டு வருடத்தில் Trinity யில் MA பட்டத்தினையும் பெற்றார்.  1672 யில் Royal Society யின் உறுப்பினராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

Isaac Newton யின் மூன்று விதிகள் மிகவும் பிரபல்யமானவை. இன்றுவரை அந்த விதிகளின் அடிப்படையிலேயே அனைத்தும் செயல்படுகின்றன. அவற்றில் மூன்றாம் விதியான ஈர்ப்பு விதி மிகவும் பிரபல்யமானவை. இந்த ஈர்ப்பு விதியினை மூன்றாக விளக்கினார் Isaac Newton. 

01. எல்லாப் பொருட்களும் ஒன்றோடொன்று ஈர்க்கப் படுகின்றன. அவை ஈர்க்கப்படுகிற வேகம் பொருளின் திண்மைக்குச் சரியான விகிதத்திலும், அவற்றுக்கிடையேயான தூரத்துக்குச் சரியான விகிதத்திலும் இருக்கும்.

02. ஒவ்வொரு வினை(action)யும் அதற்கு எதிரான, அதே அளவிலான எதிர்வினை(reaction)யைக் கொண்டிருக்கும்.

03. அசைவற்ற ஒரு பொருள் அசைவதற்கு வெளியிலிருந்து விசைத்திறம் (force) தேவைப்படும். இவற்றை அறியாத இயற்பியல் மாணவன் இருக்க முடியாது.

Isaac Newton வதித்த பதவிகள்

01. 1667 - Trinity கல்லூரியில் இயற்பியல் ஆசிரியர் ஆனார்.
02. 1672 - Royal Society யில் அங்கத்தவரானார்.
03. 1689 - Cambridge பல்கலை கழகத்தின்பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்பப்பட்டார்.
04. 1703 - Royal Society யின் தலைவர் ஆனார்.
05. 1705 - ராணியால் வழங்கப்பட்ட Knightship  பட்டத்தினை ஏற்றார்.

தனது வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே அர்ப்பனித்துக் கொண்டார். இதனால் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. 


Isaac Newton 20 மார்ச் 1727 யில் லண்டனில் வைத்து தூக்கத்திலேயே இறந்தார். இவரது இறுதி கிருகைகளுக்கு பல பிரமுகர்கள் வந்து இருந்தனர். மன்னர்கள் மற்றும் ராணிகள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


"விலைமதிக்க முடியாத மனிதகுல மாணிக்கம்" என்ற வாசகம் Isaac Newton கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

Isaac Newton பற்றிய சில உண்மைக் கதைகள்

01. 1665 ஆம் ஆண்டு Isaac Newton விடுமுறையைகளிக்க தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். வீட்டிக்கு வெளியில் எதேர்ச்சையாக அமர்ந்து இருக்கும் போது அங்கிருந்த Apple மரத்தில் இருந்து Apple பழம் கீழே விழுந்தது. அதனை பார்த்த Isacc Newton இற்கு பழம் ஏன் மேல் நோக்கியோ அல்லது வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ விழாமல் கீழ் நோக்கி விழுந்தது என்ற சிந்தனை எழுந்தது.  இதுவே Newton யின் புவிஈர்ப்பு கொள்கை உருவாக காரணமாக அமைந்தது.


02. Trinity கல்லூரியில் உள்ள அவரது ஆசிரியர் கூறும் போது Isaac Newton படம் வரைவதிலும் இயந்திரம் சார்ந்த கண்டுபிடிப்புக்களிலும் மிக ஆர்வம் உள்ளவர் எனக் கூறினார். 


03. சூரிய ஒலியினை ஒருமுறை கண்ணாடி பட்டகம் வழியே (Prism) விடும் போது அது ஏழு நிறங்களா பிரிவடைவதை உலகுக்கு எடுத்து காட்டினர்.

04. ஏழு வண்ணங்களாலான ஒரு வட்டத்தட்டை சுழற்றி அது சுழலும்போது வெண்மையாய் தெரிவதையும் அவர் காண்பித்தார். 


05. வான்வெளியில் நடப்பவைகளைக் கண்டறிய ‘டெலஸ் கோப்’ என்ற சாதனத்தையும் அவர் கண்டுபிடித்தார்.


06. அலக்ஸாண்டர் போக் (கவிஞர்) கூறுவார்: ‘இயற்கையும், இயற்கையின் விதிகளும் இருண்ட இரவில் ஒளிந்து கிடந்தன இறைவன் Newton ஐ அனுப்பி வைத்தார் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன’ என்று.



     

History
Big Bit Tech Tamil

History

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.