Google இணையத்தளமானது 1998.09.04 அன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் அகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட இந்த மாதத்தோடு 20 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இதனை தொடர்ந்து google நிறுவனம் தங்களுடைய தேடுதல் பொறியில் பல மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இது தொடர்பான செய்தி மஷாபிள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த மாற்றத்தில் நாம் ஒரு விடயத்தினை தேடுகின்ற போதும் முன்பு போல அல்லாமல் சமூகவலை தளங்களில் காணப்படும் News Feed, Photos, Videos போன்ற பல விடயங்கள் கலந்து ஒரு புதுமையான வடிவில் வழங்கப்படவுள்ளது.
மேலும் குறித்த பயனாளர் இணையத்தளத்தில் கூடுதலாக என்று விடயங்களை தேடியுள்ளார் எந்த விடயங்களில் கூடுதல் ஆர்வத்தில் உள்ளார் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு டிஸ்கவர் எனும் பிரத்தியோக பகுதியும் வழங்கப்படவுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment