Facebook நிறுவனம் கடந்த Developer மாநாட்டில் தங்கள் புது சேவையான Dating வசதியினை அறிமுகப்படுத்த இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்களுடைய Facebook Dating செயலியை பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கை முன்னர் கெலம்பியாவில் தங்களுடைய சேவையை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இந்த Dating Application மூலம் உங்களுக்கு பொருத்தமான துணையை நீங்களாவே தேர்ந்தெடுத்து அவர்களுடனான உறவை பேணிக்கொள்ள முடியும்.
பல்வேறு Dating Application கள் தற்போது பிரபல்யமாக இருந்தாலும் Facebook யின் இந்த Dating சேவையானது மக்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையானது தனியான application ஆக இல்லாமல் Facebook இல் ஒரு பகுதியாக பயன்படுத்தும் வசதியினை தந்துள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பம்சமாக உங்களுடை தனிப்பட்ட எந்த ஒரு Facebook தகவல்களும் Dating சேவையில் பயன்படாது. இதன் மூலம் நீங்கள் Facebook வேறாகவும் Dating வேறாகவும் பயன்படுத்த முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment