சாம்சங் நிறுவனம் வருகின்ற அக்டோபர் மாதம் தங்களுடைய 8K தொலைக்காட்சி பெட்டி இனை அறிமுகம் செய்யவுள்ளது.
இது Q900R 8K என்ற பெயரில் லண்டனில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த தொலைக்காட்சியானது 65" தொடக்கம் 85" வரைக்கு இடைப்பட்ட 4 வகைகளில் வெளியிடப்படுகின்றது.
இதுவரை காலமும் 4K தொழில்நுட்பமே அதிஉயர் Resoulution கொண்ட தொழில்நுட்பமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சாம்சங் நிறுவனம் அதைவிட உயர்ந்த 8K தொழில்நுட்பத்தை இந்த தொலைக்காட்சி பெட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலதிக சிறப்பம்சமாக "அம்பியென்ற் மூட்" தொழில்நுட்பம் இந்த தொலைக்காட்சி பெட்டியில் பயன்படுத்தப்படுகின்றது அதாவது பாவனையில் இல்லாத நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டி சுவரினுள் சென்று மறையும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 8K தொழில்நுட்பமானது கிட்டத்தட்ட 33 மில்லியன் பிக்சல்களை கொண்டிருப்பதனால் HD தொலைக்காட்சிகளை பார்க்கிலும் நான்கு மடங்கு தெளிவினை கொண்டிருக்கும். சாதாரண HD தொலைக்காட்சியானது 2 மில்லியன் பிக்சல்களை மாத்திரமே கொண்டிருக்கும்.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை பார்வையிட
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment